https://gumlet.assettype.com/vikatan/2021-06/98c5b322-24e5-4523-9514-f96a6a4d03c0/Uddhav_Thackeray_3.jpgமகாராஷ்டிரா: "எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை பரிசீலியுங்கள்"- முதல்வரிடம் தெரிவித்த ஆளுநர்!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழைக் கால கூட்டத்தொடர் வரும் 5-ம் தேதி தொடங்கி வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்க இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறுகிய காலம் மட்டுமே சட்டமன்றக் கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது மாநிலம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க போதுமானது இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

uddhav

இது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கொஷாரியாவை பாஜக தலைவர்கள் சந்தித்து இரண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர். அதில் சட்டமன்ற கூட்டத்தை அதிக நாட்கள் நடத்தவேண்டும் என்றும், சட்டமன்ற சபாநாயகர் தேர்தலை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதிற்கு தீர்வு காணப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் பகத்சிங் கொஷாரியா இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள மூன்று கோரிக்கைகளும் மாநிலத்திற்கு முக்கியமானது . எனவே முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் சபாநாயகர் தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தை அதிக நாட்கள் நீட்டிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. மகாராஷ்டிரா அரசு ஆளுநரிடம் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்கள் 12 பேரை நியமிக்கும்படி பட்டியல் கொடுத்துள்ளது. ஆனால் ஆளுநர் இக்கோரிக்கை குறித்து 6 மாதங்களாக எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இப்பிரச்னை கோர்ட், பிரதமர் வரை சென்றுள்ளது. ஆனாலும் இதில் ஆளுநர் முடிவு எடுக்க மறுத்து வருகிறார். தற்போதைய சிவசேனா கூட்டணி அரசு எதாவது பிரச்னை ஏற்பட்டு கவிழ்ந்துவிடும் என்றும் அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தால் பாஜகவை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்று கருதி ஆளுநர் இதில் எந்த வித முடிவு ம் எடுக்காமல் இருக்கிறார். கடந்த 17ம் தேதி முதல்வர் உத்தவ்தாக்கரே ஆளுநர் கொஷாரியாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். ஆளுநரும், மாநில அரசும் முட்டிக்கொண்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் உத்தவ்தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து சரத்பவார் முதல்வர் உத்தவ்தாக்கரேயை சந்தித்து பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசித்தார்.



from Latest News https://ift.tt/3jz1qlH

Post a Comment

0 Comments