தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சைலேந்திரபாபு கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தார். அப்போது அவர் அரங்கேற்றிய அதிரடிகள் ஏராளம். 2010 அக்டோபர் மாதம் கோவையில் இருந்து வெளியில் வந்த ஒரு செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read: உடலினை உறுதி செய்! - சைலேந்திரபாபு சொல்லும் ரகசியம்
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கால்டாக்ஸி ஓட்டுநர் மோகனகிருஷ்ணன், கோவையில் 11 வயது சிறுமி, 8 வயது சிறுவனை கடத்தினர். உடனடியாக களத்தில் இறங்கியது காவல்துறை. சிட்டி முழுவதும் வாகனங்களை அலசி ஆராய்ந்தது போலீஸ்.
ஆனால் காவல்துறை நெருங்குவதற்கு முன்பு, அந்த இரண்டு பிஞ்சுகளையும் கொடூரமாக கொலை செய்தான் மோகனகிருஷ்ணன். இந்த சம்பவம் தொடர்பாக மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட, மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு கோவை மக்கள் மட்டுமல்லால், தமிழ்நாடு முழுவதும் அவரை கொண்டாட தொடங்கினர். அவ்வபோது மப்டியில் ரோந்து செய்து அதிரடி காட்டுவார் சைலேந்திரபாபு.
கோவை, கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேராட்டம் நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. ‘தேரோட்டம் நடத்த அனுமதி கொடுங்கள்’ என்று சைலேந்திரபாபுவை மக்களும், கோயில் நிர்வாகத்தினரும் அணுகினர். அதில் நிறைய சவால்களும் இருந்தன. ஆனால், சைலேந்திரபாபு அந்தப் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு,

அதிரப்படை ஆகியோரை குவித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தை வெற்றிகரமாக நடக்க முக்கிய நபராக இருந்தார். இந்த அதிரடிகளால் கோவையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சைலேந்திரபாபு தான் சிறப்பு அழைப்பாளர்.
அவரது பேச்சு மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்தது. குற்றவாளிகளிடம் மட்டுமல்லாமல் போலீஸாரிடமும் கறாராக இருந்தார். காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தவறு செய்யும், புகாருக்குள்ளாகும் போலீஸாரை வாக்கி டாக்கி மூலமே வறுத்தெடுப்பார்.

அவரை பணியிடம் மாற்றம் செய்தததற்கு, கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவங்களும் நடந்தன. இப்போதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடங்கி கோவையில் எப்போது பெரிய குற்றங்கள் நடந்தாலும், ‘சைலேந்திரபாபுவை விசாரிக்க சொல்லுங்க’ என்று குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
கோவை அதிரடிகள் தமிழ்நாடு முழுவதும் தொடரட்டும் என வாழ்த்துகிறார்களாம் கோவை மக்கள்.
from Latest News https://ift.tt/3x8gGd8
0 Comments