https://ift.tt/3h3Fr4l : கமல்ஹாசன் - வெற்றிமாறன் - மதுரை அன்பு சந்திப்பு… வெறும் பேச்சுவார்த்தையா, புதுப்படமா?!

நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் வெற்றிமாறனும் சமீபத்தில் சந்திக்க இருவரும் இணைந்து புதுப்படம் தொடங்குகிறார்கள் என்கிற செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது. ‘இந்தியன் -2’, ‘விக்ரம்’, ‘தலைவன் இருக்கின்றான்' என மூன்று படங்கள் கமல்ஹாசனிடம் இருக்க, இயக்குநர் வெற்றிமாறனும் ஏகப்பட்ட ப்ராஜெக்ட்களோடு இருக்கிறார். இந்நிலையில் கமல்- வெற்றிமாறன் சந்திப்பு நிகழ்ந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. என்ன நடந்தது என கமல்ஹாசன் தரப்பில் விசாரித்தோம்!

‘’கமல் சார் அடுத்தடுத்து படங்களில் நடிக்க விரும்புகிறார். இயக்குநர் வெற்றிமாறனோடு ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அவர் விருப்பம். அதனால் வெற்றிமாறனை சந்திக்க விரும்பினார். அதன்படி இருவரும் சந்தித்துப்பேசினார்கள். ஆனால், உடனடியாகப் படம் தொடங்கும் திட்டம் எதுவுமில்லை. கமல் சார், இயக்குநர் வெற்றிமாறன் இருவருமே ஏகப்பட்ட கமிட்மென்ட்டுகளோடு இருக்கிறார்கள். எல்லாம் முடிந்த பிறகுதான் இருவரும் இணைவார்களா இல்லையா என்பதே தெரியும்'’ என்றார்கள்.

கமல்

‘’சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்பு இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், கமல்ஹாசன் அன்புவை சந்தித்ததாகவும் சொல்கிறார்களே’’ எனக் கேட்டோம்.

‘’மதுரை அன்புவை கமல் சார் சந்தித்தது வேறு படத்துக்கான ஃபைனான்ஸ் தொடர்பானது. இதற்கும் இயக்குநர் வெற்றிமாறன் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் முடிந்துவிட்டது. இதற்கு அடுத்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்' பட வேலைகளை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்குகிறார். ‘வாடிவாசல்' படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பர் மாதவாக்கில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from Latest News https://ift.tt/3w4g72I

Post a Comment

0 Comments