https://gumlet.assettype.com/vikatan/2021-07/bfec9797-1d5f-49ae-ab55-a12e22ef9be9/AP21212086397068.jpgகமல்பிரீத் கவுர் : வட்டு எறிதல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை... பதக்கம் வெல்வாரா?

கமல்பிரீத் கவுர்… சத்தம் இல்லாமல் ஜப்பானுக்குள் போய் இறங்கி யாரும் எதிர்பாராத சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறார். டிஸ்கஸ் த்ரோ எனப்படும் வட்டு எறுதல் விளையாட்டின் தகுதிச்சுற்றில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் கமல்பிரீத் கவுர். இவர் கலந்துகொள்ளும் வட்டு எறிதல் இறுதிப்போட்டி திங்கள்(02-08-2021) மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த 25 வயதான கமல்பிரீத் கவுர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பையின்போது 65.06மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனைப்படைத்து ஒலிம்பிக்கிற்குள் நுழைந்தார்.

அத்தோடு இந்தியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் 65.59மீட்டர் தூரம் வீசி பிரமிக்கவைத்தார் கமல்பிரீத். அதனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் கமல்பிரீத் அதிரவைக்கும் சம்பவங்கள் செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் எல்லோரது கண்களும் மற்றொரு வட்டெறிதல் வீராங்கனையான சீமா பூனியாவின் மீதே இருந்தது. ஆனால் சீமா ஏமாற்றம் அளித்தார். சீமா வெறும் 60.57மீட்டர் தூரமே வீசினார்.

கமல்பிரீத் கவுர்

ஆனால், மற்றொரு தகுதிச்சுற்றில் 64.00 மீட்டர் தூரம் வீசி தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார் கமல்பிரீத். இவருக்கு முன்பாக வலேரி ஆல்மன் 66.42மீட்டர் தூரம் வீசி முதல் இடம் பிடித்திருந்தார்.

ஓலிம்பிக்கின் டிஸ்கஸ் த்ரோ விளையாட்டில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கும் இரண்டாவது இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர். இதற்கு முன்பு 2012 ஒலிம்பிக்கில் கிருஷ்ணா பூனியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். இறுதிப் போட்டியில் அவரால் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

ஆனால், கமல்பிரீத் கிருஷ்ண பூனியா தவறவிட்டதை சாதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. திங்கட்கிழமை மாலை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் கவுர் உள்பட மொத்தம் 12 வீராங்னைகள் மோதுகிறார்கள். இதில் பர்சனல் பெஸ்ட்டாக 70.15மீட்டர் தூரம் வீசிய வலேரி ஆல்மனும் அடக்கம். இவர் இல்லாமல் ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும் கியூபாவின் பெரஸ் யாமியும் இருக்கிறார். அதனால் இறுதிப்போட்டியில் கமல்பிரீத் கவுருக்குப் போட்டி அதிகமாகவே இருக்கும்.



from Latest News https://ift.tt/3j1YjAG

Post a Comment

0 Comments