https://gumlet.assettype.com/vikatan/2021-07/f713759a-9465-4521-ac8f-a18830f69b9c/vikatan_2020_02_7119df26_8089_4fff_8a47_85107af473b2_AA_3.jpgதீவிரவாதிகளை தொடர்ந்து நக்சலைட்கள்! - மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையை கண்காணிக்கும் ட்ரோன்கள்

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு படையினர் எந்நேரமும் ட்ரோன்களையும் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தீவிரவாதிகளை தொடர்ந்து நக்சலைட்களும் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் சத்தீஷ்கர் எல்லை பகுதியில் அதிகப்படியான நக்சலைட்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் இப்போது ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் கோண்டியா மாவட்டங்களில் அதிகப்படியான நக்சலைட்களின் நடமாட்டம் இருக்கிறது.

ட்ரோன்

அவர்கள் அடிக்கடி போலீஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து மகாராஷ்டிரா டிஜிபி சந்தீப் பாட்டீல் பேசுகையில், ``சத்தீஷ்கர் எல்லையில் இருக்கும் எங்களது முகாம்களை கண்காணிக்க நக்சலைட்கள் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சிறிய வகை ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 8 ட்ரோன்கள் வந்ததை காண முடிந்தது. இந்த ட்ரோன்கள் திருமணத்திற்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படக்கூடிய சிறிய வகையாகும். அவற்றை கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தென்படும் ட்ரோன்கள்... என்ன நடக்கிறது அங்கே?

மலைகளில் இருந்து கொண்டு பாதுகாப்பு படையினர் எங்கு இருக்கின்றனர் என்பதை கண்காணிக்க இந்த சிறிய வகை ட்ரோன்களை பயன்படுத்தும் நக்சலைட்கள் அவற்றை ஐதராபாத்தில் இருந்து வாங்கியுள்ளனர். நக்சலைட்களில் இந்த ட்ரோன் முயற்சியை சத்தீஷ்கர் போலீஸாரின் துணையோடு கண்காணித்து வருகிறோம். கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகளை தொடர்ந்து நக்சலைட்கள் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பாதுகாப்புபடையினருக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ட்ரோன்கள் மூலம் எளிதில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.



from Latest News https://ift.tt/3j9gJ2q

Post a Comment

0 Comments