ராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடந்த 2019-ல் 80 கிலோ அளவிலான போதைப்பொருள் கடத்தப்பட்டது. அப்போதைய, ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீஸார், இந்த கடத்தல் தொடர்பாக 11 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கானது புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ராமநாதபுரம் டி.எஸ்.பியாக இருந்த ரகுபதி, தற்போது திருநெல்வேலி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக உள்ளார். இதற்கிடையே தான் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, இந்த வழக்கு விசாரணையை கீழமை கோர்ட் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கினை விரைந்து முடிக்கத் திட்டமிட்ட புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு கோர்ட் டி.எஸ்.பி ரகுபதியை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், டி.எஸ்.பி ரகுபதி ஆஜராகவில்லை. இந்த நிலையில் தான், வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, டி.எஸ்.பி ரகுபதிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
from Latest News https://ift.tt/3mdYEld
0 Comments