https://gumlet.assettype.com/vikatan/2021-09/7cc0ea52-2453-4fa6-9e02-9425e16f8822/Cops_become_a_e.jpgநடிகை மனிஷா கொய்ராலாவின் செயலர் கொலை; துப்பறிய வாட்ச்மேன் வேலை பார்த்த போலீஸ்!

குஜராத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட மணிஷ் சிங் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் மும்பையில் உள்ள நாலாசோபாராவில் பதுங்கி இருப்பதாகக் குஜராத் போலீஸாருக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. உடனே குஜராத் குற்றப்பிரிவு போலீஸார் மஹாவீர் சிங் என்பவரை மும்பைக்கு அனுப்பி மணிஷ் சிங்கை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறார். மணிஷ் சிங் வசிக்கும் வீடு போலீஸாருக்குத் தெரியவந்தது. அங்கு சில நாள்கள் கான்ஸ்டபிள் மஹாவீர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் மணிஷ் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது. மிகவும் அபூர்வமாகத்தான் வீட்டை விட்டு வெளியில் வருவார்.

Also Read: மும்பை: கூலிப்படையைவைத்து கணவனைத் தீர்த்துக்கட்டிய பெண் போலீஸ்!

கைதைத் தடுத்த கூட்டம்

இதையடுத்து மணிஷ் சிங்கைத் தொடர்ந்து கண்காணிக்க மணிஷ் வசித்த கட்டிடத்தில் கான்ஸ்டபிள் மஹாவீர் வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து 20 நாட்கள் வாட்ச்மேன் வேலை பார்த்த கான்ஸ்டபிள் மஹாவீர் தொடர்ந்து கண்காணித்து சரியான நேரத்தில் மணிஷ் வெளியில் வந்த போது கைது செய்தார். ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் அவர் வசித்த கட்டிடத்தில் இருந்தவர்கள் மணிஷ் சிங்கை கைது செய்ய விடாமல் தடுத்தனர். இதையடுத்து உள்ளூர் போலீஸாரின் துணையோடு கைது செய்வதை தடுத்த முயன்ற கூட்டத்தை விரட்டிவிட்டு கைது செய்தனர். இதுகுறித்து கான்ஸ்டபிள் மஹாவீர் கூறுகையில், மணிஷ் எப்போதாவதுதான் வீட்டைவிட்டு வெளியில் வருவார். இதனால் மணிஷைக் கைது செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மணிஷ் நடிகை மனிஷா கொய்ராலாவின் செயலரைக் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்திருக்கிறார். தற்போது சுபாஷ் சிங் என்ற தாதாவிடம் மணிஷ் வேலை செய்து வருகிறார் என்றனர்.



from Latest News https://ift.tt/3D3zNaR

Post a Comment

0 Comments