கோவிட்-19 என்ற பெருந்தொற்றுக்குப் பிறகுதான் நமது கவனம் நுரையீரல் ஆரோக்கியத்தின் பக்கம் திரும்பியது. நுரையீரல் ஆரோக்கியத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். ஆனால் கோவிட் மட்டுமல்ல நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல விஷயங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.

Also Read: நுரையீரல் தொற்று நோய்களைத் தடுக்கும் உள்முக சுவாசப் பயிற்சி... ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் பெங்களூரு தேசிய நோய் தகவல் ஆராய்ச்சி மையம் (NCDIR) இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், `கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2016-ல் 12.6 லட்சம் என்றிருந்த இந்த எண்ணிக்கை, 2020-ல் 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2025-ம் ஆண்டில் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.7 லட்சத்தை எட்டக்கூடும்.
இந்தியாவில் உள்ள புற்றுநோய்களில் அதிகபட்சமாக 27.1 சதவிகிதம், புகையிலையின் காரணமாக ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் உள்ள பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்' என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

நுரையீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் ஃபோர்டிஸ் வடபழனி மருத்துவமனை இணைந்து `உங்கள் நுரையீரல் நலமா?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தவுள்ளன. அக்டோபர் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறும். மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் மாற்று மருத்துவர் கோவினி பாலசுப்ரமணி, அவசர சிகிச்சை மருத்துவர் எம்.சாய் சுரேந்தர், நுரையீரல் மருத்துவர் சிந்தூரா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசவிருக்கின்றனர்.
நுரையீரல் ஆரோக்கியம் காப்பதற்கான ஆலோசனைகள், உடற்பயிற்சி, நுரையீரலை பாதிக்கும் விஷயங்கள், நுரையீரலைத் தாக்கும் கோவிட்-19 உள்ளிட்ட தொற்றுகள் பற்றிய ஆலோசனைகள், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் பேசவிருக்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.

Also Read: நுரையீரல் நோய்த்தொற்று, மூச்சுத்திணறல், மாதவிடாய் பிரச்னைகள்... தீர்வளிக்கும் லிங்க முத்திரை!
இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
from Latest News https://ift.tt/3l0X2fD
0 Comments