https://gumlet.assettype.com/vikatan/2021-07/04dc514e-30b6-49ba-a527-80f917072d67/60e7dc28233eb.jpgகோவிட் காலத்தில் 113% அதிகரித்த வீடு விற்பனை; சென்னையில் நிலை என்ன?

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை முக்கியமான ஏழு நகரங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 113% அதிகரித்திருப்பதாக அனராக் (ANAROCK) ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2020-ன் மூன்றாம் காலாண்டில் சுமார் 29,520 வீடுகள் விற்பனையான நிலையில் 2021-ன் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 62,800 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது 156% அதிகரிப்பாகும்.

ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)

Also Read: `சொந்த வீடே வேண்டாம்' என நினைக்கும் இளம் தலைமுறையினர்; அவர்களின் எண்ணம் சரிதானா? - 16

2020-ன் மூன்றாம் காலாண்டில் 32,530 புதிய வீடுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் 2021-ன் மூன்றாம் காலாண்டில் 64,560 வீடுகளுக்கான கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 78 சதவிகித அதிகரிப்பாகும். இதில், மும்பை மெட்ரோ பாலிடன் பகுதியில் அதிகபட்சமாக 16,510 புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

புதிய வீடுகளில் ரூ. 40 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான நடுத்தர விலை வீடுகளின் பங்களிப்பு 41 சதவிகிதமாக இருக்கிறது. ரூ. 40 லட்சத்துக்குள் விலை உள்ள வாங்கக் கூடிய விலையிலான அஃபோர்டபிள் வீடுகளுக்களுக்கான பங்களிப்பு 2021-ன் மூன்றாம் காலாண்டில் 24 சதவிகிதமாக இருக்கிறது. ப்ரீமியம் வீடுகளின் பங்களிப்பு 25 சதவிகிதமாக உள்ளது.

Home (Representational Image)

Also Read: சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17

2021-ன் மூன்றாம் காலாண்டில் சென்னையில் கிட்டத்தட்ட 3,405 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகி இருக்கின்றன. இது முந்தைய 2020-ன் மூன்றாம் காலாண்டை விட 113 சதவிகிதம் அதிகமாகும். 2021-ன் மூன்றாம் காலாண்டில் சென்னையில் கிட்டத்தட்ட 2,980 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது முந்தைய 2020-ன் மூன்றாம் காலாண்டை விட 48 சதவிகிதம் அதிகமாகும். முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை 1% முதல் 4% வரை அதிகரித்துள்ளது.



from Latest News https://ift.tt/3AWDTAW

Post a Comment

0 Comments