துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி மகா பெரியவர். காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றியவர். பலரது துயரங்களைப் போக்கியிருக்கிறார். துன்பங்களை நீக்கியிருக்கிறார்.
ஜாதக கட்டத்தைப் பார்க்காமலே பரிகாரம் சொல்லும் மகான் அவராக தான் இருக்க முடியும். பெரியவா பற்றி அவருடன் வாழ்ந்த சீடர்கள் பலர் அவர் நிகழ்த்திய அதிசயங்கள் அற்புதங்கள் பலவற்றைச் சொல்லி கண்டும், கேள்வியும் பட்டிருப்போம். அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர்.
பெரியவாவுக்கு சிவன் என்னும் பக்தர் இருந்தார். ஒரு முறை சிவன் பெரியவா தரிசனம் எல்லாம் முடிந்து உத்தரவு வாங்கச் சென்றார். வழக்கமாக கை அசைத்து அனுப்பும் பெரியவா அன்று செல்லும் வழியில் சோடா வாங்கிப் பருக சொல்லியிருக்கிறார். செங்கல்பட்டில் பஸ் ஏறி திருநெல்வேலி புறப்பட்டார். ஒரு கிராமத்தில் வண்டி நிற்கும் போது சிவன் பெரியவா சொன்னதை நினைவு கூர்ந்து வண்டியில் இருந்து இறங்கி கடையில் சோடா வாங்கிப் பருகுகிறார். அப்போது அவர் அமர்ந்த இருக்கையில் வேறு சில வாலிபர் அமர, சிவன் பின்னாடி சென்று அமர்கிறார். என்ன நேர்ந்தது தெரியவில்லை வண்டி மீண்டும் கிளம்பிய ஒரு சில நொடிகளில் ஒரு லாரி மோதி சிவன் முதலில் அமர்ந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. ஒரு சோடா வாங்க வண்டியில் இருந்து இறங்கியதால் சிவனின் உயிர் தப்பியது. அந்த சம்பவத்தை நினைக்கும் போது பெரியவா தன்னை எப்படி காப்பாற்றியிருக்கிறார் என்பதை நினைத்து கண்கள் குளமானது சிவனுக்கு!
சாருகேசி எழுதிய "காமகோடி பெரியவா" இ-புக் முற்றிலும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க
பெரியவா இப்படி தன் வாழ்க்கை முழுக்க செய்த அற்புதங்களை அவர் பாதமே கதி என்று சரண் அடைந்த பக்தர்கள் பலரும் பகிர்ந்த அனுபவங்கள் அடங்கிய ஓர் அற்புத பொக்கிஷ நூல் தான் இந்த "காமகோடி பெரியவா" மின்னூல்.
உங்கள் கரங்களில் தவழவிருக்கும் இந்த மின்னூல், உங்கள் ஆன்மிகத் தேடலுக்கு உறுதுணையாக அமையட்டும். இந்த மின்னூலை நீங்கள் வாசிக்கும்போது பெரியவாவுடன் பயணிக்கும் அனுபவம் நிச்சயம் கிட்டும்.
இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?
சாருகேசி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான "காமகோடி பெரியவா" புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறைகள்:
உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, உங்கள் சுய விவரங்களை ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம்.
நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புக் விகடன் App-ல் உள்ள Library பக்கத்தின் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம்.
from Latest News https://ift.tt/3ikkouV
0 Comments