https://gumlet.assettype.com/vikatan/2021-09/25929088-977d-40d6-8bf8-94fcc4772df7/Screenshot_2021_09_30_09_12_45_50_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpgதிருத்தணி: பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்! - வைரலான வீடியோ; மடக்கி பிடித்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (22). நேற்று முன்தினம் இளைஞர் உதயகுமார் தனது 22-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மத்தூர் காலனி அருகிலுள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அங்குச் சென்றவர், நண்பர்கள் வாங்கி வைத்திருந்த `கேக்´-ஐ இருசக்கர வாகனத்தின் மீது வைத்து இரண்டரை அடி நீளம் கொண்ட பட்டாக் கத்தியால் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டினார். அப்போது, உதயகுமாரின் நண்பர்கள் அவர் கத்தியால் கேக் வெட்டியதை தங்களது மொபைலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்

அந்த வீடியோ, வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் மத்தூர் காலனி பகுதிக்கு விரைந்த போலீஸார், பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் உதயகுமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, பட்டாக் கத்தியைப் பறிமுதல் செய்தனர். உதயகுமார் ஏற்கெனவே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாகக் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லா வடசென்னை வரலாறு! - சார்பட்டா பரம்பரை வாசகர் விமர்சனம்



from Latest News https://ift.tt/3CSWONm

Post a Comment

0 Comments