https://gumlet.assettype.com/vikatan/2019-09/cc15bedc-7915-4419-8901-2e19c9b766cc/IMG_20190922_WA0041.jpgவனவிலங்குகளைக் காக்க மறுவாழ்வு மையங்கள்; தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஆர்வலர்கள்!

காயம்பட்ட புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரத்யேக மையங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவைத்தவிர தமிழகத்தின்‌ வேறு பகுதிகளில் இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட வன விலங்குகளை வண்டலூருக்குத்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம் ஏற்பட்டு அவை இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.

Indian Gaur

அண்மையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்குள் உடல்நலக்குறைவுடன் பிடிக்கப்பட்ட சிறுத்தை, முதுமலையில் தாய் இறந்த நிலையில் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புலிக் குட்டிகள் போன்றவை சிகிச்சைக்காக வண்டலூருக்குத்தான் கொண்டு செல்லப்பட்டன. சமீபத்தில் மசினகுடியில் பிடிக்கப்பட்ட T23 புலியைக் கூட மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றுதான் சிகிச்சையளித்து பராமரித்து வருகின்றனர். ஆனால், வன விலங்குகள் அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதிகளில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களின் தேவை அவசியமாகிறது.

இந்த நிலையில், முதுமலை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வன விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும், அவை முழுமையாக குணமடையும் வரை பராமரிக்கவும் மறுவாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. விரைவில் இந்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டால் வன விலங்குகள் பாதுகாப்பில் இது முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T23 புலி

Also Read: T23 புலி: `சிகிச்சைக்குப் பின் வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும்!' - வனத்துறை அமைச்சர்

இந்த மறுவாழ்வு மையம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``வன விலங்குகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மையங்கள் இல்லாதது தமிழக வனத்துறையில் பெரிய குறையாக இருக்கிறது.

இதனால் பல சமயங்களில் விலை மதிக்க முடியாத வன உயிர்களை இழக்க நேரிடுகிறது. எனவே இந்தக் குறையை களைய வேண்டியது வனத்துறையின் முக்கிய கடமையாக இருக்கிறது.

சிறுத்தை

Also Read: `உடைந்த கோரைப்பல்; லேசான கல்லீரல் பாதிப்பு!' - எப்படி இருக்கிறது T23 புலி?

இந்த வசதிகள் இருக்கும்பட்சத்தில், காயம்பட்ட அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட வன விலங்குகளை மீட்டு வந்து சிறப்புக் கட்டமைப்பில் வைத்து தரமான சிகிச்சையளித்து மீண்டும் வனத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு சரணாலய கட்டுப்பாட்டின் கீழ் இந்த மையம் செயல்படும்" என்றார்.



from Latest News https://ift.tt/3BtFu0x

Post a Comment

0 Comments