ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் 'ரோஜா'. சன் டிவியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜே அக்ஷயாவிற்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
'ரோஜா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஷாமிலி கர்ப்பமான காரணத்தினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். பிறகு, அவருக்குப் பதிலாக சன் டிவியில் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த விஜே அக்ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார்.
Also Read: "இசைவாணி அக்கா அப்பாவைத் தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க!" - `பிக் பாஸ்' இமானின் மகள் ஜெஃபி ஷைனி
இந்நிலையில் அக்ஷயா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுவிட சிரமமாக இருக்கிற காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதிவிட்டிருக்கிறார். மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் எனவும் இன்னும் கொரோனா முழுமையாகக் கட்டுப்படவில்லை என்பதையும் அவர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல், 'சித்தி 2' மற்றும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்த வீனா வெங்கடேஷ் என்பவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து இரண்டு தொடர்களிலிருந்துமே நீக்கப்பட்டார். இந்நிலையில், 'ரோஜா' தொடரில் அக்ஷயா தொடர்ந்து நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஏற்கெனவே, 'ரோஜா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களைக் கவர்ந்த ஷாமிலிக்குப் பதிலாக இவரை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கே சில மாதங்கள் ஆனது. இப்போது புதியதாக ஒருவர் வந்தால் இந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றியவராக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from Latest News https://ift.tt/2ZMpFVL
0 Comments