https://gumlet.assettype.com/vikatan/2021-10/ec7d7ef8-3405-4955-a027-414a7c87251b/Shrawan_Nadar_d.jpg``ஆர்யன் கான் ஷாருக் கானிடம் பணம் வாங்கித்தரச் சொன்னார்" டிவியில் பேட்டிகொடுத்த திருடன் கைதானது ஏன்?

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை ஆர்தர்ரோடு சிறையில் இருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருடன் ஜாமீன் வழங்கப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட், மாடல் அழகி முன்முன் தமாசா ஆகியோர் சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் ஞயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர். ஆர்யனுடன் ஆர்தர் ரோடு சிறையில் ஸ்ராவன் என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். ஸ்ராவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஸ்ராவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஸ்ராவன்

Also Read: ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிப்பு! - காத்திருந்து அழைத்துச் சென்ற ஷாருக் கான், கௌரி கான்

ஆர்யன் விடுவிக்கப்படும் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்ராவன் இந்த நேரத்தில் சிறைக்கு வெளியில் டிவிகளுக்கு பேட்டி கொடுத்தால் பெரிய அளவில் பிரபலமாகலாம் என்று நினைத்தார். உடனே ஆர்தர் ரோடு சிறைக்கு சென்ற ஸ்ராவன் சிறை வாசலில் நின்று கொண்டு, ``நான்தான் சிறையில் ஆர்யன் கானுடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். 10 நாள்களுக்கு முன்பு ஜாமீனில் நான் விடுதலை செய்யப்படும்போது ஆர்யன் கான் என்னிடம், ``சிறைக்கு பணம் அனுப்பும்படி எனது தந்தையிடம் தெரியப்படுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டார். நானும் ஷாருக் கான் இல்லமான மன்னத்திற்கு இச்செய்தியை தெரிவிக்கச் சென்றேன். ஆனால் வீட்டு வாசலில் நின்ற வாட்ச் மேன் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை" என்று அனைத்து டிவி சேனல்களுக்கும் ஸ்ராவன் பேட்டி கொடுத்தார். இது முக்கிய டிவி சேனல்களில் ஒளிபரப்பானது. இதனை மும்பை ஜுகு போலீஸ் நிலைய அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜுகு போலீஸார் ஏற்கனவே ஸ்ராவனை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேடிக்கொண்டிருந்தனர். உடனே ஜுகு போலீஸார் உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்து ஸ்ராவனைக் கைது செய்தனர். ஸ்ராவன்மீது மும்பையின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சிறையில் ஆர்யன் கானுடன் ஸ்ராவன் அடைக்கப்பட்டு இருந்ததைச் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால் ஆர்யன் ஸ்ராவனிடம் தனது தந்தைக்குத் தகவல் தெரிவித்து அனுப்பினாரா என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.



from Latest News https://ift.tt/3bpcpZs

Post a Comment

0 Comments