வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரிலிருந்து இன்று காலை ஆற்காடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. ஆற்காடு வேப்பூரைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணி என்பவர் பேருந்தை ஓட்டினார். கண்டக்டராக 40 வயதான பிரபாகரன் என்பவர் பணியிலிருந்தார். வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு 8.40 மணிக்கு வந்தடைந்த அந்த பேருந்தில், கல்லூரி மாணவர்கள் பலர் முண்டியத்து ஏறினர். பலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் பேருந்தை சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில், ஓட்டுநர் சுப்பிரமணி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சத்துவாச்சாரியை அடுத்திருக்கும் பெருமுகை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது.

அப்போது, ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின்மீது மோதிய பேருந்தை வலதுபுறமாக வளைத்து, சடன் பிரேக் அடித்திருக்கிறார். அதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமிருந்த பேரிகார்டுகளை மோதி உடைத்தபடி சென்று நின்றது. இந்த விபத்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் உட்பட 12 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர். பைக்கில் வந்த நபரும் காயமடைந்தார். தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற சத்துவாச்சாரி போலீஸார் காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸுகள் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
from Latest News https://ift.tt/3lk7oXz
0 Comments