சீர்காழியில் சேவை மனப்பான்மையுடன் 5,000-க்கும் மேற்பட்ட கொடிய விஷமுள்ள பாம்புகளைப் பிடித்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றிய பாம்பு பிடி வீரரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் வசிப்பவர் `பாம்பு' பாண்டியன். இவர் சிறுவயது முதலே பாம்பு பிடிப்பதில் ஆர்வம் கொண்டு, தொடர்ந்து பாம்புகளை பிடித்து வருகிறார். இவரை இரண்டுமுறை விஷம் கொண்ட பாம்புகள் கடித்து உயிருக்குப் போராடி உயிர்பிழைத்திருக்கிறார். வீடுகளிலோ, தோட்டங்களிலோ பாம்புகள் புகுந்தால் உடனடியாக `பாம்பு' பாண்டியனைத்தான் பொதுமக்கள் அழைப்பார்கள்.

Also Read: இளைஞர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்ட குளம்; 50 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சி!
`பாம்பு' பாண்டியன் சேவை மனப்பான்மையுடன் உடனடியாக அங்கு சென்று பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டுச் சென்று விட்டு விடுவார். சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாண்டியன் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் பிடித்து வனத்தில் விட்டுள்ளார். உரிய நேரத்தில் பாம்புகளைப் பிடித்து பல உயிரிழப்புகள் நடைபெறுவதையும் தவிர்க்க உதவியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாம்புகளைப் பிடித்து வரும் பாண்டியனின் சேவை மனப்பான்மையை கௌரவிக்கும் பொருட்டு, சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மார்கோனி ஆகியோர் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து `சிறந்த சமூக சேவகர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தனர்.

Also Read: `விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ₹5,000' - அரசின் புதிய அறிவிப்பு என்ன சொல்கிறது?
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க ஆளுநர் பாலாஜி பாபு, துணை ஆளுநர் வைத்தியநாதன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
from Latest News https://ift.tt/3EcKXLh
0 Comments