சென்னை கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்களும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் குடிசை மாற்று வாரியத்தால் சென்னைக்கு வெளியே செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். தாழம்பூர், படுஊர் போன்ற ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டால் செம்மஞ்சேரி என்று பெயரிலேயே ஏரி சுமந்த இடத்தில் வெள்ளம் பெருகும்.
செம்மஞ்சேரில இரண்டு அடுக்கு வீடுகள் உள்ளன. மழைத்தண்ணி கீழ் அடுக்கு வீட்டுக்குள்ள போனதால், சமைக்க முடியாமல் அரசு கொடுக்கும் உணவு வகைகளை உண்டு வருகிறார்கள். கொசுக்கடி, பூச்சி, புழு போன்ற பிரச்னைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. கழிவறை போன்ற அடிப்படை தேவைகளுக்கே பெண்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. மேல் மாடியில் உள்ள வீட்ல கேட்டு கேட்டு பயன்படுத்துகிறார்கள்.
``ஏரில தண்ணீர் திறந்துவிட்டால் முறையா தகவல் வர்றதில்லை. எங்களால எங்க பொருளை காப்பாத்திக்க முடியலன்னு” வருந்தும் மக்கள், மூன்று நாட்களாக கரன்ட் இல்லாம தவிக்கும் மக்களுக்கு தற்போது கரன்ட் கொடுத்தாலும் உயிர்சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள்.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் இசையரசு அவர்களிடம் பேசினோம்.. செம்மஞ்சேரியில் கழிவுநீர் வடிகால் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலை தந்தார். மேலும், ``மழைக்காலங்களில் செம்மஞ்சேரியிலிருந்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பு போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முனவைத்தார்.
இதுகுறித்து நீரிய வல்லுநரும் பேராசிரியருமான ஜனகராஜன் அவர்கள் கூறுகையில், ``செம்மஞ்சேரியில் உள்ள மழை நீர் வடிய வேண்டும் என்றால் உயராய்வு (Elevatin survey )எடுக்க வேண்டும். தண்ணீர் வடிவதற்கு வழி இருந்துருக்கும். அங்கேயும் சுவரோ வீடோ கட்டி இருப்பார்கள். வடியும் வழியை கண்டறிந்தால் மட்டுமே மழைநீர் தேங்காமல் இருக்கும்” என்றார்.
கு.சௌமியா
மாணவப்பத்திரிகையாளர்
from Latest News https://ift.tt/3FW9HYI
0 Comments