'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'அம்மன்'. இந்தத் தொடரில் ஜோடியாக நடிக்கும் அமல்ஜித்தும், பவித்ராவும் தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர்.

இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு கேப்ஷன் வாயிலாக தங்களுடைய காதலை பரிமாறி வந்த நிலையில் தற்போது இருவரும் வெளிப்படையாகவே தங்களுடைய காதலை அறிவித்துள்ளனர். அமல்ஜித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Half' என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இந்த ஜோடிக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் தற்போதைய அறிவிப்பையடுத்து, திருமணம் எப்போது எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், 'ஸ்ரேயா - சித்து' , 'மதன் - ரேஷ்மா', 'ஷபானா - ஆர்யன்' எனத் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகப் பேசப்பட்ட ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது. அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராகும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்! பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா கேரளாவின் மருமகளாக இருக்கிறார்.

வாழ்த்துகள் அமல்ஜித் - பவித்ரா!
from Latest News https://ift.tt/31eC8lN
0 Comments