https://gumlet.assettype.com/vikatan/2021-11/5c536c2e-1f38-4d6c-8510-7bfb5d706108/IMG_20211129_WA0020.jpgகனமழையால் உருக்குலைந்த கொள்ளிடம் கடைமடைப் பகுதி; தவிக்கும் தொழிலாளர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொள்ளிடம் அருகேயுள்ள வேட்டங்குடி, பழையபாளையம், எடமணல், திருக்கருகாவூர், கடவாசல், வடகால், மகராஜபுரம், பச்சைபெருமாநல்லூர், மகேந்திரப்பள்ளி, காட்டூர், கார்வேலி, அளக்குடி புதுப்பட்டினம், தற்காஸ் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 5,000 ஏக்கர் சம்பா நடவு மற்றும் நேரடி விதைப்பு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மழை வெள்ளம்

Also Read: 4-வது முறையாக 142 அடியைத் தொட்ட முல்லைப்பெரியாறு அணை; மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

மேலும் கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு சுனாமி நகரில் பக்கிங்காம் கால்வாய் மூலம் தண்ணீர் புகுந்து சுமார் 800 குடியிருப்பு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல், கிட்டியணை உப்பனாறு நிரம்பியுள்ளதால், தற்காஸ் கிராமத்திலுள்ள சம்பா நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. மேலும் அங்குள்ள 20 குடியிருப்புகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் கனமழையால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள கதவணை வழியே ஆற்றுநீர் புகுவதால் குத்தவக்கரை, ஆற்றங்கரை தெரு, பூசைநகர் பகுதியிலுள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியிலுள்ள சுமார் 100 குடியிருப்புகளையும் வேட்டங்குடி கிராமத்தில் சுமார் 60 குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது.

மழை வெள்ளம்

Also Read: 50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய மதுரை மாடக்குளம் கண்மாய்; குத்துக்கல் விழா நடத்திய விவசாயிகள்!

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் கடலுக்குள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடிக்கச் செல்லும் 5,000 மீனவர்கள்  தொடர்ந்து 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. பழையாறு துறைமுக வளாகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் 2,000 தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து கிராம பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/316HrnC

Post a Comment

0 Comments