https://ift.tt/3lmNevX ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய மதுரை மாடக்குளம் கண்மாய்; குத்துக்கல் விழா நடத்திய விவசாயிகள்!

மதுரை மாநகருக்குள் 326 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஆதாரமாக 167 மில்லியன் கன அடி நீர் தேங்கும் வகையில் அமைந்துள்ளது மாடக்குளம் கண்மாய். தமிழகத்தில் ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயைப்போல பெரியது மாடக்குளம் கண்மாய்.

கண்மாய் நடுகல்லுக்கு பூஜை

Also Read: `13-ம் நூற்றாண்டு நில தானத்திற்கான ஆதாரம் இது!' - மதுரை கல்வெட்டில் வெளிவந்த சுவாரஸ்யம்

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், வாய்க்கால்கள் மூலமாக இக்கண்மாய்க்கு வந்து சேரும் வகையில் இதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்மாயை பாதுகாத்து தேவையான நேரத்தில் தண்ணீர் திறந்துவிட மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் மன்னராட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மடை காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இப்போதும் அவர்களே பரம்பரையாக மடையை காத்து வருகிறார்கள்.

இதுபோல் தமிழகம் முழுவதும் முக்கியமான கண்மாய்களை பாதுகாக்க அப்பகுதியில் வசிக்கும் சில குடும்பத்தினர் பெருமையுடன் இருந்து வருகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்துள்ள நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டதால் மாடக்குளம் கண்மாய் நிரம்பியது.

நடு கல்லுக்கு பூஜை

இதற்கு முன்பு பெய்த ஆண்டுகளில் மழையால் கண்மாய் நிறையவில்லை. 50 ஆண்டுகளுக்கு பின் கடந்த 29-ம் தேதிதான் கண்மாய் முழு அளவை எட்டிவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் குத்துக்கல்கள் தண்ணீரில் மூழ்கியது. மறுகாலும் பாய்ந்தது.

இதைத்தொடர்ந்து மாடக்குளம் பகுதி பொது மக்கள் கண்மாயின் கரையோரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்தியும் பாரம்பர்ய முறைப்படி குத்துக்கல் மீது முகூர்த்த கம்பை நடும் பாரம்பர்ய விழாவையும் உற்சாகமாக கொண்டாடினார்கள். அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முகூர்த்த கம்பு நட பரிசலில் செல்கிறார்கள்

Also Read: `இது எங்களோட வெற்றி!'- 58-ம் கால்வாயில் 58 பானை பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்ற அதிமுகவினர்

பாரம்பரியமாக மடையை காக்கும் குடும்பத்தினர் கண்மாய்கரையிலிருந்து சாமிக்கு படைத்த முகூர்த்த மூங்கில் கம்புகளை எடுத்து நீந்திச் சென்று குத்துக்கல் மீது நட்டுவைத்து குலவையிட்டனர். நீண்ட காலத்துக்கு பிறகு இந்த நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அப்பகுதியிலுள்ள மூத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இளம் தலைமுறையினர் ஆச்சரியமாக பார்த்தனர்.

``மாடக்குளம் கண்மாயில் நீர் நிறைந்துள்ளதால் மதுரை மாநகர மக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது, நிலத்தடி நீர்மட்டம் உயரும், இதன் மூலம் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



from Latest News https://ift.tt/3d2f3Fn

Post a Comment

0 Comments