இளையராஜா இப்போது 'தமிழரசன்', 'மருத', 'மாயோன்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இன்று காலை அவரது உடல்நிலை பற்றி திடீரென வதந்தி பரவியது.
இதுகுறித்து இசைஞானியின் நெருங்கிய வட்டாரத்தில் மீடியாக்கள் விசாரித்தபடி இருந்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவும், வீண் வதந்தி என்றும் இப்படி ஒரு வதந்தியை பரப்பியவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது தரப்பிலிருந்து கூறினார்கள்.
இந்த நிலையில் இன்று காலை அவர் வீட்டிலிருந்து ஸ்டூடியோவிற்கு காரில் செல்லும் போது.. பயணித்தபடியே தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை 'இளமை இதோ இதோ. இனிமை இதோ..' என 'சகலகலா வல்லவன்' பட பாடலை பாடலாகவே பாடி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
from Latest News https://ift.tt/32Rq2zt
0 Comments