https://gumlet.assettype.com/vikatan/2021-12/8b5e6c1a-4628-4ce0-bcbf-379a1a278094/24677_thumb.jpg`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.70-க்கு மது வழங்குவோம்!’ - சொல்கிறார் ஆந்திரா பா.ஜ.க தலைவர்

ஆந்திராவில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது. அவர்களின் வாக்குகளை கவர அம்மாநில பா.ஜ.க புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பா.ஜ.க-வின் மாநில தலைவர் சோமு வீர்ராஜு விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ``ஆந்திராவில் ஒரு கோடி மக்கள் அதிக விலையுள்ள மதுவை வாங்கி குடிக்கின்றனர். மலிவு விலை மது கிடைக்கவேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு கோடி மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் ரூ.70-க்கு மதுவை விற்பனை செய்வோம்.

மது

வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் மது பானத்தின் விலையை ரூ.50 ஆக குறைக்கவும் தயாராக இருக்கிறோம். தரம் குறைந்த மதுபானங்களை அதிக விலைக்கு மாநில அரசு விற்பனை செய்கிறது. அனைத்து வகையான போலி பிராண்ட் மதுபானங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிரபலமான மதுபான வகைகள் கிடைப்பதில்லை.

ஆந்திராவில் மதுபானத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.12 ஆயிரம் செலவு செய்கின்றனர். ஆனால் அந்த பணத்தை மாநில அரசு எதாவது ஒரு நலத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு மீண்டும் வழங்குகிறது. ஆளும் கட்சி தலைவர்களுக்கு மதுபானத் தொழிற்சாலைகள் இருக்கிறது. அத்தொழிற்சாலையில்களில் இருந்து அரசுக்கு மிகவும் தரமற்ற மது சப்ளை செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சோமு வீர்ராஜு

தற்போது ஆந்திராவில் ஒரு குவார்ட்டர் பாட்டில் மது 200 ரூபாயிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவேதான் பா.ஜ.க மலிவு விலைக்கு மது கொடுப்பதாக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளது.



from Latest News https://ift.tt/3EvyqC0

Post a Comment

0 Comments