உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் சமீபத்தில் பெர்ஃப்யூம் தயாரித்துவரும் பியூஷ் ஜெயின் என்பவரின் வீடு, அலுவலங்களில் அதிரடி ரெய்டு நடத்தி ரூ.250 கோடி வரை ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ரெய்டு தற்போது பா.ஜ.க-வால் அரசியலாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த புஷ்பராஜ் ஜெயின் என்பவரின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்துவதற்கு பதில் பியூஷ் ஜெயின் வீடு, அலுவலகங்களில் ஜி.எஸ்.டி மற்றும் நேரடி வரிவிதிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதாகச் செய்தி வெளியானது. பியூஷ் ஜெயின், புஷ்பராஜ் ஜெயின் இரண்டு பேரும் உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இருவரும் கன்னுஜ் நகரில் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இருவரும் பெர்ஃப்யூம் தயாரிக்கும் தொழில் செய்துவருகின்றனர். இதனால்தான் அதிகாரிகளுக்குக் குழப்பம் ஏற்பட்டு, ரெய்டை வேறு ஒருவரது வீட்டில் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகள் மறுத்திருக்கின்றனர். புஷ்பராஜ் ஜெயின் என்பவர்தான் `சமாஜ்வாடி' பெயரில் பெர்ஃப்யூம் வெளியிட்டார். ஆனால், பியூஷ் ஜெயினும் பெர்ஃப்யூம் தயாரிப்பில் ஈடுபட்டுவருவதால், பெயர் குழப்பத்தில் அவர்தான் `சமாஜ்வாடி பெர்ஃப்யூம்' வெளியிட்டிருக்க வேண்டும் என்று கருதி பியூஷ் ஜெயின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். இந்த நிலையில், புதிய திருப்பமாக இன்று காலை முதல் புஷ்பராஜ் ஜெயினுக்கு தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திவருகின்றனர். நாடு முழுவதும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது.

தவற்றைத் திருத்திக்கொண்டு, தற்போது சரியான நபரின் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு இது போன்ற ரெய்டுகளை வருமான வரித்துறையைப் பயன்படுத்தி பா.ஜ.க நடத்துவதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்திருக்கிறது. புஷ்பராஜ் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தினால் அரசியலாக்கப்படும் என்று கருதி, மற்றொரு பெர்ஃப்யூம் தயாரிப்பாளரான மாலிக் மியான் என்பவரது அலுவலகங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்திவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றாம்சாட்டிவருகின்றன.
Also Read: ஆள்மாற்றி ரெய்டு நடத்திய அதிகாரிகள்; `சமாஜ்வாடி பெர்ஃப்யூம்' விவகாரத்தில் ட்விஸ்ட்!
from Latest News https://ift.tt/344FGIt
0 Comments