https://gumlet.assettype.com/vikatan/2021-12/953bfa13-6fe8-43d3-bfda-38719c83c88d/5b2a315c_59be_11ec_9635_f5da2bf3d835_1639144158574.webpஆர்யன் கைது; போலி சாதிச் சான்றிதழ் குற்றச்சாட்டு - நெருக்கடியில் சமீர் வான்கடே!

மும்பையில் அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான குழு கைது செய்தது. இந்த கைதைத் தொடர்ந்து சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்தார். பணம் பறிக்கவே ஆர்யன் கானை கைது செய்ததாகவும், போலி சாதிச்சான்றிதழை தாக்கல் செய்து தாழ்த்தப்பட்டவர் என்ற பிரிவில் வேலை வாய்ப்பு பெற்றதாகவும் சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சமீர் வான்கடேவிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழை தாக்கல் செய்யும் படி மகாராஷ்டிரா சாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் கமிட்டி கேட்டுக்கொண்டது. ஆனால் கமிட்டி முன்பு ஆஜரான சமீர் வான்கடே வழக்கறிஞர் ராமச்சந்திர ராணே, தங்களிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழ் தற்போது இல்லை என்றும், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் தேவை என்றும் கமிட்டியிடம் கேட்டுக்கொண்டார்.

நவாப் மாலிக்

விசாரணையின் போது சமீர் வான்கடே மீது புகார் செய்த அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் அசோக் காம்ப்ளே ஆகியோரும் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட விசாரணை வரும் 18-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அசோக் காம்ப்ளே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிதின் இது குறித்துக் கூறுகையில், ``சமீர் வான்கடே தன்னிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழ் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அவற்றைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்" என்றார்.

சமீர் வான்கடே

மாநில அரசு சாதிச் சான்றிதழ் கேட்டிருப்பதால் சமீர் வான்கடேவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சாதிச் சான்றிதழை தாக்கல் செய்யாதபட்சத்தில் போலி சாதிச் சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்தார் என்று கூறி சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிம் என்றும், ஆனால் தன்னை எஸ்.சி என்று கூறி சாதிச் சான்றிதழ் வாங்கியதாக நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார்.

Also Read: மகாராஷ்டிரா: `சமீர் வான்கடே குறித்த கருத்துக்கு என்னை மன்னித்துவிடுங்கள்!’ - அமைச்சர் நவாப் மாலிக்



from Latest News https://ift.tt/3FBHmHp

Post a Comment

0 Comments