தி.மு.க ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும், துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரவையில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஆனால், தனக்குப் பதவி மேல் ஆசையில்லை என்று கோவையில் நடந்த கூட்டத்தில் உதயநிதி பேசியிருக்கிறார்.

உதயநிதிக்கும், கோவைக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் கோவையில் தி.மு.க அடைந்த தோல்வியால், கொங்கு மண்டலம் உதயநிதி கன்ட்ரோலுக்குச் செல்கிறது என்று தகவல் வெளியானது.
கோவை கூட்டத்தில் பேசிய உதயநிதி, ``மாதத்துக்கு ஒரு முறை கோவை வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், மாதத்தில் 10 நாள்கள் உங்களுடன் தங்கியிருந்து பணி செய்வேன்” என்று கூறினார். இந்த நிலையில், கோவை மாவட்டம், தோலம்பாளையம் ஊராட்சியில் சீங்குளி எனப்படும் பழங்குடி கிராமம் உள்ளது.

அங்கு புதிதாக `உதயா நகர்’ உருவாகியிருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. உதயநிதி காலரில் கைவைத்திருப்பது போன்ற அந்தப் பகுதியின் பெயர்ப் பலகைப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகின்றன.
இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தபோது, தோலம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஜெயா செந்திலை கைகாட்டினர். அவரிடம் பேசியபோது, ``கலைஞர் காலத்துல அவங்களுக்குப் பட்டம் கொடுத்தாங்க. இப்ப சி.எம் ஸ்டாலின், சீங்குளி 7, 8-வது வார்டு மக்களுக்கு பட்டா கொடுத்தார்.

அந்த ஏரியாவுக்குப் பேரு இல்லை. அதனாலதான் சின்னவர் பேரை வெச்சுட்டோம்” என்றவரிடம், `தலைவர் பெயரை வைக்காமல், ஏன் உதயா என்று பெயர் வைத்தீர்கள்... தலைவர் கோவிச்சுக்க மாட்டாரா?’ எனக் கேட்டோம்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தவர், ``இந்த நிகழ்ச்சி நடந்தப்ப ஒரு ஆண் குழந்தைக்குப் பேருவெக்கச் சொன்னாங்க. அந்தக் குழந்தைக்கு `இன்பநிதி’னு பேருவெச்சேன்.

இனி தமிழ்நாட்டுக்கு இவங்கதான். எப்படியும் இவங்கதான் வளர்ந்து அடுத்து வரப்போறாங்க அதனாலதான்" என்றார்.
Also Read: கடுகடுத்த உதயநிதி... கலக்கத்தில் உடன்பிறப்புகள்! - கோவை திமுக கூட்டம் ரிப்போர்ட்
from Latest News https://ift.tt/3sK4H5W
0 Comments