புதுக்கோட்ட மாவட்டம் ரெகுநாதபுரம் வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னாத்தாள் (40). இவர் மகன் தினேஷ்வரன் (21). தினேஷ் வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். ஈஸ்வரியும் தினேஷைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்வரியின் சம்மதத்துடன், அவர் பெற்றோர் வேறு ஒருவருடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. இதுகுறித்து தகவலறிந்த தினேஷ், ஈஸ்வரியின் வீட்டுக்குச் சென்று தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.

மேலும், அவரின் தாய் சின்னாத்தாளும் ஈஸ்வரியையும், அவர் குடும்பத்தினரையும் கடுமையாகத் திட்டியிருக்கிறார். இதனால், மனமுடைந்த ஈஸ்வரி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். ஈஸ்வரியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரெகுநாதபுரம் போலீஸார், தினேஷ் மற்றும் சின்னாத்தாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கடந்த 2012, நவம்பர் 14-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 9 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதித் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ஈஸ்வரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக, முதல் நபரான தினேஷுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தினேஷின் தாய் சின்னாத்தாளுக்கு 7 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இருவரும் முறையே இந்த அபராதத் தொகையைக் கட்டத்தவறினால், இருவருக்கும் மேலும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றார்.
Also Read: கஞ்சா விற்பனைக்குத் துணைபோன காவலர்கள்..! - அதிர வைக்கும் புதுக்கோட்டை நிலவரம்
from Latest News https://ift.tt/3etObPr
0 Comments