https://gumlet.assettype.com/vikatan/2019-05/c6c80815-73b5-4cb9-bb27-c68f15acad19/86253_thumb.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனுத் தாக்கல் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது!

தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது . இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்த 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,838 பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சனிக்கிழமையான நாளையும் வேட்புமனு தாக்கல் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரம்

இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் 1,000 ரூபாயும், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் 2,000 ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் 40,00 ரூபாயும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இதில் பாதி தொகையையும் வைப்பு நிதியாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், வேட்புமனுத் தாக்கலின்போது தவறுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

திமுக - அதிமுக

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குவதையடுத்து தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 21-ல் 11 மேயர்கள் பெண்கள்... முதல்வர் `மூவ்’வின் பின்னணி என்ன?!



from Latest News https://ift.tt/3AE2Od6

Post a Comment

0 Comments