கோவை நீலாம்பூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி அலாவுதீன் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது.
Also Read: FOLLOW UP: அம்பலப்படுத்திய ஜூ.வி... அதிரடி காட்டிய கோவை மாநகராட்சி ஆணையர்!
எதிரில் பேசியவர், ``நான் மண் அள்ளுகிற கூலி வேலை செய்கிறேன். வேலை செய்யும்போது ஒரு தங்கக் கட்டி கிடைத்தது. அது ரூ.15 லட்சம் மதிப்புடையது. நீங்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால், தந்துவிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
மேற்படி கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டு தரப்பினரும்சந்தித்திருக்கின்றனர். தன் மனைவியுடன் அலாவுதீன் செல்ல, அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்பட மூன்று பேர் அங்கிருந்திருக்கின்றனர். அவர்கள் அலாவுதீனிடம் தங்கக் கட்டி என்று சொல்லி ஒன்றை கையில் கொடுத்துவிட்டு ரூ.10 லட்சம் கேட்டிருக்கின்றனர். அலாவுதீன் அதற்கு, `ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு, மீதியை பிறகு தருகிறோம். எனக் கூறியிருக்கிறார்.
அதையடுத்து, அந்த மூவரும் பணத்தை வாங்கிக்கொண்டு தங்கக் கட்டி என்று ஒரு பொருளை அலாவுதீனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து இடத்தை காலிசெய்திருக்கின்றனர். ஆனால், அதை தங்க கட்டி என்று நம்பிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்ற தம்பதிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது.
அந்தக் கட்டியை சோதனை செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட 2 கிலோ மதிப்பிலான உலோகக் கட்டி என்று தெரியவந்தது. அதையடுத்து, இதுகுறித்து அலாவுதீன் மனைவி நெசிலா கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரித்தனர்.
அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த நிஜாம், உசேன் அலி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தான் அலாவுதீன் மற்றும் அவர் மனைவியை ஏமாற்றியது தெரியவந்தது.
நண்பர்களாக பழகி வந்த அந்த மூவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை இழந்திருக்கின்றனர். அதனால், வசதிபடைத்த யாருக்காவது போன் செய்து ஏமாற்றலாம் என்று நிஜாம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, உசேன் அலி தன் சித்தப்பா ஷேக் அலாவுதீனின் எண்ணை கொடுத்திருக்கிறார். அவரிடம் கிருஷ்ணமூர்த்தியை பேச வைத்து மோசடி செய்து ரூ.5 லட்சம் வாங்கியிருக்கின்றனர்.
கேரளா தப்பி செல்ல இருந்த மூன்று பேரையும், பொள்ளாச்சி – ஆழியார் சாலை அருகே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
from Latest News https://ift.tt/33QNez2
0 Comments