https://gumlet.assettype.com/vikatan/2020-08/f27e1aa1-e9dc-4173-9a64-36c3d0e45d8d/cockpit_2576889_1920.jpgகுடியரசு தின அணிவகுப்பில் கவனம் ஈர்த்த ரஃபேல் பெண் விமானி; யார் இந்த ஷிவாங்கி சிங்?

டெல்லியில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் கண்ணைக் கவரும் பல்வேறு அணிவகுப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில் விமானப்படை அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் பைலட்டான ஷிவாங்கி சிங் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவில், 2020-ம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டுடன் ரஃபேல் போர் விமான வர்த்தம் 59,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வரை 32 ரஃபேல் போர் விமானங்களைப் பெற்றுள்ளது இந்தியா. இன்னும் நான்கு ரஃபேல் போர் விமானங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போர் விமானத்தின் இரண்டாவது பெண் பைலட்டும், ரஃபேல் விமானத்தின் முதல் பெண் பைலட்டுமான ஷிவாங்கி சிங், குடியரசு தின விழாவில் விமானப்படைக்கான அணிவகுப்பில் பங்கேற்றார்.

யார் இந்த ஷிவாங்கி சிங்?

26 வயதான ஷிவாங்கி சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில்லுள்ள வாரணாசியைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியை முடித்த ஷிவாங்கி சிங், வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். ஓர் அரசியல்வாதியின் கட்சி கூட்டத்துக்கு ஹெலிகாப்டர் வந்ததை சிறு வயதில் பார்த்த ஷிவாங்கிக்கு தானும் பைலட் ஆகவேண்டும் என்ற விதை விழுந்துள்ளது.

Pilots

Also Read: அரசின் வேளாண் பாடத்தை வடிவமைக்கப்போகும் விவசாயி; யார் இந்த ஹுகும்சந்த் படிதார்?

2017-ல் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் எனப்படும் பைலட் நுழைவுத்திட்டத்தின் வழியாக இந்திய விமானப்படையில் இணைந்தார். முதலில், ஒரியன்டேஷன் கோர்ஸ் படித்தார். பிறகு, ஏர் ஃபோர்ஸ் அகாடெமியில் பிலாடஸ் பிசி எம்எம்கே விமானத்தில் பயிற்சி பெற்றார். ரஃபேல் விமானத்தில் பறப்பதற்கு முன் எம்ஐஜி 21 பைசன் போர் விமானத்தில் பைலட்டாகப் பறந்தார். எம்ஐஜி போர் விமானம் 1971-ம் ஆண்டில் நடந்த போரில் பெரும் பங்கு வகித்துள்ளது.

2019-ம் ஆண்டு பாகிஸ்தானால் கடத்தப்பட்ட அபிநந்தன் வர்தமானுடன் இவர் சக பைலட்டாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் அம்பலாவிலுள்ள இந்திய விமானப் படையின் கோல்டன் அரோஸ் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஷிவாங்கி சிங்

Also Read: `நான் பறக்கப் பிறந்தவள்!' - `வந்தே பாரத்' மீட்புக்குழு அனுபவம் பகிர்ந்த பைலட் லட்சுமி ஜோஷி

குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்கேற்கும் ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் பைலட் என்கிற பெருமையை பெற்றுள்ளார் ஷிவாங்கி சிங். அவர் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றதற்கு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உமன் பவர்!



from Latest News https://ift.tt/3AEnbH6

Post a Comment

0 Comments