மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினார்கள். மோப்ப நாய் அந்த பகுதிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது.
இறந்தது யார் என்று தெரியாத நிலையில், முன் பகையாலோ அல்லது ரவுடிக் கும்பலினாலோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்தனர்.
உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தீவிர விசாராணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு இக்கொலையில் சில தடயங்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்துதான் கொல்லப்பட்டது மணிமாறன் என்பவர் என்பதையும், கொலை செய்தது அவரது பெற்றோர் என்பதையும் உடனே கண்டுபிடித்திருக்கின்றனர்.
Also Read: சென்னை, மதுரை, தூத்துக்குடி... 2021 குற்ற வழக்குகள் டேட்டா சொல்வது என்ன?
இதுகுறித்து கரிமேடு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் விசாரித்த டீமிடம் பேசினோம், "ஆரப்பாளையத்தில் வசிக்கும் மணிமாறனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் குடிப்பழக்கத்தால் மனைவியும், குழந்தையும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஆரப்பாளயத்தில் கூலி வேலை செய்யும் பெற்றோர் முருகேசன்-கிருஷ்ணவேணி வசிக்கும் வீட்டில் தங்கியிருந்த மணிமாறன், எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு பெற்றோர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
Also Read: `திருமணம் தாண்டிய உறவு; காட்டிக்கொடுத்த செல்போன்!’ - திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் சிக்கிய மனைவி
கடந்த 27-ம் தேதி இரவும் குடித்துவிட்டு கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமான முருகேசன் விறகு கட்டையால் மணிமாறனை தாக்கியிருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்த மணிமாறன் இறந்திருக்கிறார். இதை வெளியே தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து சாக்கு மூட்டையில் மணிமாறனின் உடலைக் கட்டி நள்ளிரவில் சைக்கிளில் ஏற்றி காமராஜர் மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அதோடு அங்கிருந்து கிளம்பி வழக்கம்போல் தங்கள் வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதும் எதுவும் தெரியாதவர்கள் மாதிரியே ஏரியாவில் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், சிசிடிவி காட்சிகள் அவர்கள்தான் கொலைகாரர்கள் என்பதை உறுதி செய்ய உதவியது. அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தபோது முருகேசனும் அவர் மனைவியும் சைக்கிளில் ஒரு மூட்டையைக் கொண்டு செல்வது தெளிவாகத் தெரிந்தது. அதோடுதான் அவர்களை பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர். சிசிடிவி இல்லையென்றால் இந்தக் கொலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்" என்றனர்.
இந்த சம்பவத்தில் துரிதமாக விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது.
மதுப்பழக்கம் என்னும் சமூகத்தீமை, பெற்ற மகனையே கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு பெற்றோரை நிம்மதியிழக்க செய்துள்ளது!
from Latest News https://bit.ly/34e0DRo
0 Comments