தன் அசத்தலான நடிப்பின் மூலம் பாலிவுட் திரைத்துறையைக் கலக்கி வரும் நவாஸுதீன் சித்திக் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'பேட்ட' என்னும் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். தற்போது அவர் மும்பையில் தன் கனவு இல்லத்தை மூன்று ஆண்டுகள் செலவிட்டு தானே வடிவமைப்பாளராக இருந்து கட்டி முடித்துள்ளார். இந்த வீடு உத்தரபிரதேச மாநிலத்தில் புதானாவில் உள்ள அவரது பழைய வீட்டைப் போலவே கட்டப்பட்டதாகும்.
நவாஸுதீனின் தந்தை 'நவாபுதீன் சித்திக்' கடந்த 2015-ல் தனது 72 வது வயதில் மறைந்தார். அவர் தந்தையின் நினைவாக 'நவாப் பங்களா' என்று தன் தந்தையின் பெயரையே தன் புதிய பங்களாவிற்கு சூட்டியிருக்கிறார் என்பது இந்தவீட்டின் சிறப்பம்சமாகும். இந்த புதிய பங்களாவின் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நவாஸுதீன் .
Also Read: கடைசி நேரத்தில் `பிக் பாஸ் அல்டிமேட்’டிலிருந்து விலகிய நடிகை... காரணம் இதுதான்!
அந்தப்பதிவில் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவரது உள்ளதில் உள்ள தூய்மைதான் தான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரது பதிவிற்கு லைக்குகளை அள்ளித்தந்து அவரது புதிய வீட்டைக் குறித்து தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
from Latest News https://bit.ly/3rcwcUS
0 Comments