https://gumlet.assettype.com/vikatan/2022-01/effeb6a5-4972-480b-a34f-3bbb0c3afb7f/Congress_BJP_join_hands_in_Nalbari.jpg``உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையவில்லை என்றால் மொத்த இந்தியாவும் பின்தங்கும்!" - அமித் ஷா

பிப்ரவரி 10-ம் தேதி முதல் உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகத் திகழும் உத்தரப்பிரதேசத்தில், தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பா.ஜ.க தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கட்டிலிலிருந்து பா.ஜ.க-வை வெளியேற்றிவிட வேண்டும் என்பதால் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றன.

உ.பி-யில் பா.ஜ.க தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பரப்புரையில் களம் இறங்கியிருக்கிறார்.

பாஜக

நேற்றைய தினம் உத்தரப்பிரதேசத்தின் பிராஜ் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமித் ஷா, ``நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையவில்லையென்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியில் பின்தங்கிவிடும். உத்தரப்பிரதேசத்தின் தேர்தல்தான் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கின்ற தேர்தல்" என்றார்.

மோடி, யோகி ஆதித்யநாத்

தொடர்ந்து பேசிய அவர், ``மத்தியில் 7 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மோடி அரசின் மீது ராகுல் காந்தியால் கூட ஊழல் குற்றச்சாட்டு வைக்கமுடியாது. அப்படிதான் இங்கு யோகியின் ஆட்சியும் இருந்திருக்கிறது. மேலும், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜூம் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே பணியாற்றி இருக்கின்றன. ஆனால் பா.ஜ.க அப்படியில்லை, இந்த ஆட்சியில்தான் ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசமும் வளர்ச்சியடைந்திருக்கிறது. எனவே இந்த மாநிலத்துக்கு எந்தக் கட்சி அல்லது எந்த சித்தாந்தம் வேண்டுமென்று தேர்தலே முடிவு செய்யும். எனவே பா.ஜ.க-வுக்கு மீண்டும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்று கூறினார்.

Also Read: உத்தரப்பிரதேசம்: ``அகிலேஷ் யாதவ் ஜின்னாவின் ஆதரவாளர்!” -பாஜக கடும் விமர்சனம்



from Latest News https://ift.tt/34cKn32

Post a Comment

0 Comments