https://gumlet.assettype.com/vikatan/2022-01/61325a0c-3a83-4dfc-9a57-d5d2555218ea/640px_Indian_Election_Symbol_Two_Leaves_svg.pngதேசிய அளவில் பாஜக... தமிழக அளவில் அதிமுக - அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு..?!

இந்தியாவில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து, ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி 2019-2020 நிதியாண்டில் மாநில மற்றும் தேசிய அளவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பில் பா.ஜ.க ரூ.4,847.78 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் ரூ.588.16 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து முறையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.569.519 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் ரூ.247.78 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.29.78 கோடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.8.20 கோடி என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அ.தி.மு.க

மேலும், மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த பட்டியலில் ரூ.563.47 கோடியுடன் சமாஜ்வாடி கட்சி முதலிடத்திலும், ரூ.301.47 கோடியுடன் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி இரண்டாவது இடத்திலும், ரூ.267.61 கோடியுடன் அ.தி.மு.க மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழக அளவில் அ.தி.மு.க தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க இந்தப் பட்டியலில் ரூ.184.24 கோடியுடன் 6-வது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: BJP vs DMK ! ஆட்டத்தை மாற்றிய Modi!



from Latest News https://bit.ly/3u8z7Q9

Post a Comment

0 Comments