காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்களுக்கு முன்பு பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வந்தார். அவருடன் முதல்வர் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களும் சென்றனர். பொற்கோயிலில் வழிபட்டுவிட்டு அங்குள்ள சமுதாய அன்னதான கூடத்தில் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டார். ராகுல் காந்தி பொற்கோயிலுக்கு சென்ற போது அவரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அகாலி தளம் எம்.பி.ஹர்சிம்ரத் கவுர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ``பொற்கோயிலில் ராகுல் காந்தியின் பாக்கெட்டில் திருடியது யார்? சென்னியா? சித்துவா? சுக்ஜிந்தர் சிங்கா? இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்த ராகுல் காந்தி அருகில் இந்த மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இது போன்ற சம்பவங்களால் கோயிலுக்கு கெட்ட பெயரை கொண்டு வரும் முயற்சியா" என்று கேட்டுள்ளார். ராகுல் காந்தியிடம் திருடப்பட்டு இருந்தால் அவருடன் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள்தான் இக்காரியத்தை செய்திருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, ``எம்.பி கவுர் தவறான செய்தியை பரப்பி வருகிறார். அவர் சொல்வது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. இது போன்ற தவறான செய்தியை பரப்புவது பொற்கோயிலை அவமதிப்பதாகும். நீங்கள் பொறுப்புடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ளவேண்டும். மோடி அமைச்சரவையில் இருந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை அனுமதித்தது நிச்சயம் கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது போன்றதாகும்” என்று தெரிவித்தார்.
அகாலி தளம் எம்.பி.கவுர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தார். விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாவிற்கு எதிராக தனது அமைச்சர் பதவியை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.
from Latest News https://ift.tt/4vhmpWiXr
0 Comments