https://gumlet.assettype.com/vikatan/2022-01/ca9d93fb-a307-49f9-96b8-15e172becdb7/air_india_homecoming.jpg"உனது வருகைக்காகக் காத்திருந்தோம்"- மேம்படுத்தப்பட்ட உணவு சேவை மூலம் ஏர் இந்தியாவை வரவேற்கும் டாடா!

69 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டாடா நிறுவனத்திடம் வந்திருக்கிறது ஏர் இந்தியா. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது PTI. இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற விமானியான JRD டாடா தற்போது ஏர் இந்தியா என்று அழைக்கப்படும் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை 1932-ல் துவங்கினார். இதன் வளர்ச்சி உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் பரவி இருந்தது. பின்னர் சில காரணங்களால் 1946-ல் டாடா நிறுவனத்தின் ஏர்லைன்ஸ் பொது நிறுவனமாக்கப்பட்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1946-ல் ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீத பங்கை இந்திய அரசு எடுத்துக் கொண்டது. எனினும் JRD டாடா 1978 வரை இந்தியன் ஏர் லைன்சின் தலைவராகவும் இயக்குநராகவும் பதிவு வகித்தார். பின்னர் 1986-ல் இந்திரா காந்தியின் தலைமையிலான அரசு ரத்தன் டாடாவை ஏர் இந்தியாவின் தலைமைப் பதவியில் அமர்த்தியது. அதன்பின் தற்போது 2022-ல் நரேந்திரா மோடியின் தலைமையிலான அரசு, ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்கையும் விற்பதாக அறிவித்தது.

அக்டோபர் 8 2021-ல் நடத்தப்பட்ட ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 27, 2022-ல் PTI அதிகாரப் பூர்வமாக ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறது. இறுதியாக 69 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டாடா நிறுவனத்திடம் வந்தது ஏர் இந்தியா. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாடா குழுமம், "உனது வருகைக்காகக் காத்திருந்தோம்" எனப் பதிவிட்டு, "WELCOME BACK, AIR INDIA" என்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

டாடா சன்ஸின் தலைவரான சந்திரசேகரன், "ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமத்துடன் சேர்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்ற உறுதியேற்போம். ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களையும் அன்புடன் வரவேற்கிறோம். உங்களுடன் ஒன்றாக இணைந்து வேலை செய்ய ஆர்வமாக உள்ளது" என்றும் அவர் கூறியிருந்தார்.

ரத்தன் டாடா

தற்போது ஏர் இந்தியாவின் முதல் கட்ட செயலாக மும்பை - டெல்லி (A1864) (A1687), மும்பை - பெங்களூர் (A1639), மும்பை - அபுதாபி (A1945) போன்ற நான்கு விமானங்களில் மேம்படுத்தப்பட்ட உணவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'மேம்படுத்தப்பட்ட உணவு சேவை' மும்பை - நெவார்க் விமானம் மற்றும் ஐந்து மும்பை - டெல்லி விமானங்களில் இன்று முதல் (ஜனவரி 28, 2022) வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.



from Latest News https://ift.tt/3g2b2Cr

Post a Comment

0 Comments