https://gumlet.assettype.com/vikatan/2020-03/231ad3b0-d781-44c0-9681-6f676131631c/DSC09089.JPGமெரினா: ராட்சத அலையில் சிக்கி அண்ணன் - தம்பி பலி! - சென்னையில் சோகம்

கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஏதும் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 9 பள்ளி மாணவர்கள் மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது கடலில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களில் 2 பேர் கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

மெரினா

அதைக்கண்டு உடனிருந்த நண்பர்கள் கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கின்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியிலிருந்த தீயணைப்புத்துறையினர் உதவிக்கு வந்திருக்கின்றனர்.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் மீட்பதற்குள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு, மூச்சு திணறி இறந்துவிட்டனர். பின்னர் சிறுவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மெரினா போலீஸார், சிறுவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இறந்துபோன மாணவர்கள் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் ஹரிஸ் என்றும், இருவரும் அண்ணன் - தம்பி என்றும் தெரியவந்தது.



from Latest News https://ift.tt/9JQYSH6

Post a Comment

0 Comments