https://gumlet.assettype.com/vikatan/2021-11/3c06ce15-1fbc-4f5e-9595-ca4be49d1396/619e0a504df69.jpgசென்னை: நடன நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை! - அரசு டாக்டர் கைது

சென்னை தேனாம்பேட்டையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை இரவு நடன நிகழ்ச்சி நடந்தது. அதில் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் பங்கேற்றார். நள்ளிரவில் அதிகாரியின் மனைவி நடனமாடிக் கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் அதை எதேச்சையாக நடந்ததாக அதிகாரியின் மனைவி கருதினார். ஆனால், தொடர்ந்து திட்டமிட்டே அந்த இளைஞர், அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

உடனே அதிகாரியின் மனைவி அந்த இளைஞரைக் கண்டித்தார். அதன்பிறகும் அந்த இளைஞர், பாலியல் தொல்லைக் கொடுப்பதை நிறுத்தவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அதிகாரியின் மனைவி, தன்னுடைய கணவரிடம் விவரத்தைக் கூறினார். அவரும் அந்த இளைஞரைக் கண்டித்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அதிகாரி மனைவியிடமும் சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சூழலில் அதிகாரியின் மனைவி, இளைஞர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இளைஞரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சத்யபிரகாஷ் என்றும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து அரசு டாக்டர் சத்யபிரகாஷை போலீஸார் கைது செய்தனர்.

கைது

விசாரணையின்போது சத்யபிரகாஷ், போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தி அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தத் தகவல் மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட டாக்டர் சத்யபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



from Latest News https://ift.tt/TNDFrZs

Post a Comment

0 Comments