ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று நாள்களுக்கு மேலாகவே உக்ரைனில் ரஷ்யப் படையினர் போர் செய்து வருகின்றனர். உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்ய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான வண்ணமாக உள்ளன. இந்தப் போரில் ரஷ்யப் படைகளை எதிர்ப்பதற்கு ஏவுகணை, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி உதவ ஜெர்மனி முன்வந்திருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை மர்ம நபர்களால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனுக்கு எதிரானப் போரில் ரஷ்யர்களுக்கு ஆதரவாக கிரிப்டோ கரன்சி மூலம் நன்கொடை கேட்பது போன்ற ட்வீட்டுகள் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன. அதையடுத்து, ஜே.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா-வில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/GcMN70E
0 Comments