ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில நாள்களாக மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதைக் கண்டித்து பல்வேறு நாடுகளும் ரஷ்யாவை எச்சரித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் புதினுக்கு எதிராக மிகப் பெரிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ஆகியோருக்கு தொடர்புடைய சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 27 நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூடி முடிவு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
from Latest News https://ift.tt/pkDvJ8B
0 Comments