உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் உக்ரைன் அதிபர், ``ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 130 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 316 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், எங்களோடு இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போராட யார் இருக்கிறார்கள்? இதுவரை அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினர் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் தயாராக இல்லை. எல்லோரும் ரஷ்யாவை எதிர்க்கப் பயப்படுகிறார்கள்.
எனவே உக்ரைன் ரஷ்யாவோடு போராடத் தனித்து விடப்பட்டுள்ளோம். ரஷ்யாவின் நாசக்காரப் படை கிவ் நகருக்குள் நுழைந்துவிட்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவைச் சரியாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

ரஷ்யா முதல் இலக்காகக் குறிவைத்துள்ள நானும், எனது குடும்பமும் இப்போதும் உக்ரைனில் உங்களோடு தான் இருக்கிறோம். ரஷ்யா உக்ரைன் அரச தலைவரை வீழ்த்துவதன் மூலம் உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க விரும்புகிறார்கள்" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
from Latest News https://ift.tt/UB6rxHV
0 Comments