கடந்த ஆண்டு டிசம்பரில் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநரான லூகாஸ் சான்சல், பிரெஞ்சு பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி உட்பட பல நிபுணர்களால் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த சர்வதேச அமைப்பின் அறிக்கை ஒன்று வெளியானது.
அதில், "இந்தியா ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடு. 2021 ஆம் ஆண்டில் மொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதி, 1 சதவிகித மக்களிடம் உள்ளது. அதற்கும் அடுத்த நிலையில் வெறும் 13 சதவிகிதம் மக்களே உள்ளனர். கீழே உள்ள 50 சதவிகிதம் பேரின் சராசரி வருமானம் ரூ. 53,610, என்றும் தெரியவந்துள்ளது. மேலும்,10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ. 11,66,520-க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்" என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியாவை 'ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடு' என்று கூறும் உலக சமத்துவமின்மை அறிக்கை குறைபாடுடையது.
எடுத்துக்காட்டாக, அமெரிக்கா போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில், சமமற்றவை எனக் கூறப்படுவது, ஸ்வீடன் போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் சமமானவை. ஆனால் அறிக்கை அதைச் சரியாகக் கணிக்கவில்லை.

அறிக்கையின் முதன்மை ஆசிரியரான லூகாஸ் சான்சல், கொரோனா தொற்றுநோய், செல்வந்தர்களுக்கும் மற்ற சாதாரண மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தியதாகக் கூறியிருந்தார். முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தங்கள் கடன் கணக்குகளைச் செயல்படாத சொத்துகளாக மாற்றியவர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்கவில்லை.
ஆனால் இந்தியாவின் பொதுத்துறை பிரிவு வங்கிகள் கடன் செலுத்தாதவர்களிடமிருந்து தங்கள் சொத்துக்களைக் கையகப்படுத்திய பிறகு ரூ, 10,000 கோடிக்கு மேல் மீட்டெடுத்துள்ளது.

முதல் முறையாக நாட்டில், பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ், வங்கிகள் பல கடன் செலுத்தாதவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றன. முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது, கடன் செலுத்தாதவர்களிடமிருந்து பணம் எதுவும் திரும்பப் பெறப்படவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
from Latest News https://ift.tt/s3lIE6t
0 Comments