அதிமுக பிரமுகர் தலையில் வெட்டுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? அல்லது விபத்தா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராகவும், அ.தி.மு.க ஊராட்சி செயலாளராகவும் இருந்தவர். இவர் டூவிலரில் ஆலத்தூர் கேட்டியிலிருந்து காரை செல்லும் சாலையில் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்ட பாடாலூர் காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு இதனை ஒரு விபத்து போல் நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்று உறவினர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``அவரின் தலை பகுதியில் அரிவாள் வெட்டு காயம் இருப்பதால் திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்று உறவினர் தரப்பில் புகார் கொடுத்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையின் அறிக்கை அடிப்படையில் இது கொலையா அல்லது விபத்தா? என்பது உறுதிப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
from Latest News https://ift.tt/qDGtLx3
0 Comments