https://gumlet.vikatan.com/vikatan/2022-04/d15c2b65-ae37-4cf3-abae-336eb826b030/IMG_20220417_WA0007.jpgகோவை: ஆய்வுக்குச் சென்ற பெண் கவுன்சிலர் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு... நடந்தது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து, மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோவை வந்திருந்தார். அப்போது ‘வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி தொடங்கப்படும்.’ என்று அவர் கூறியிருந்தார்.

ஆய்வு

இதையடுத்து, மாநகராட்சி மண்டல மற்றும் குழு தலைவர்கள், அதிகாரிகள் நேற்று மாலை வாலாங்குளம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் நிதிக்குழு தலைவர் முபசீரா உள்ளிட்டோர் படகு சவாரி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் வாலாங்குளத்தில் ஆலோசனை நடத்தினர்.

கீழே விழுந்த காட்சி

பிறகு, அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பணிக்குழு தலைவரும் 63-வது வார்டு கவுன்சிலருமான சாந்தி முருகன் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரின் கை எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.

சாந்தி முருகனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது. “அதே இடத்தில் இதற்கு முன்பு பலர் விழுந்துள்ளனர். சிறு தடுப்புக் கூட இல்லை. கொஞ்சம் தவறினாலும் நேரடியாக குளத்துக்குள் தான் விழ வேண்டும். இதுதான் கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள் உண்மை முகம். அதிகாரிகள் இனியாவது இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோவை மக்கள் கூறி வருகின்றனர்.



from Latest News https://ift.tt/GvhoKQf

Post a Comment

0 Comments