குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குப் பிறகு, எனக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டுமே பீரியட்ஸ் வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதை அதிகரிக்க வழிகள் உண்டா?
- சாரா பானு (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.
``பிரசவத்துக்குப் பிறகு பீரியட்ஸின்போது ப்ளீடிங் குறைந்துபோக பல காரணங்கள் இருக்கக்கூடும். 3 வயதாகியும் நீங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுகிறீர்களா என்று தெரியவில்லை. தாய்ப்பால் ஊட்டுவதால் ப்ளீடிங் அளவு குறையலாம். குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட நீங்கள் கருத்தடை மாத்திரைகள் ஏதேனும் எடுத்துக்கொள்கிறீர்களா, காப்பர் டி போன்ற ஹார்மோன் சாதனங்கள் ஏதும் பொருத்திக்கொண்டிருக்கிறீர்களா என்ற தகவல் இல்லை.
தைராய்டு இருந்தாலோ, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாகி அனீமியா எனப்படும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலோகூட ப்ளீடிங் குறையலாம்.
இவற்றையெல்லாம் தாண்டி, ஸ்ட்ரெஸ் அதிகமிருந்தாலும் ப்ளீடிங் குறைய வாய்ப்புண்டு. எனவே, உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என அறிந்து அதற்கேற்ற மருத்துவ சிகிச்சையைப் பின்பற்றினால் இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/ctxCoIj
0 Comments