சாப்பாட்டுக்குப் பிறகு ஸ்வீட் பீடா போடுவது ஆரோக்கியமானதா? தினமும் வெற்றிலை, பாக்கு போடலாமா?
- அமித் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
``ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பீடா சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. ஆனால், ஸ்வீட் பீடாவை அடிக்கடியோ, தினமுமோ சாப்பிடுவது சரியானதல்ல.
சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை-பாக்கு போடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. செரிமானத்துக்காக அவர்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். பிரசவமான பெண்களுக்கு முதல் 40 நாள்கள் வரை வெற்றிலை கொடுப்பது இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது. குழந்தை பெற்ற பெண்களின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்வதற்கான விஷயமாக அது செய்யப்படுகிறது.

ஆனால், சமீபகாலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக் குழாயில் எரிச்சலையும் வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். வெற்றிலை நல்லதுதான் என்றாலும் தினமும் எடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/xiJFHsT
0 Comments