https://gumlet.vikatan.com/vikatan/2019-05/b7590e14-d340-468b-b459-95cfe2c1f931/83988_thumb.jpg``பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம்..!” - இஸ்லாமிய அமைப்புக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி யாசின் மாலிக்-க்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இதையொட்டி, யாசின் மாலிக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) எனும் இஸ்லாமிய அமைப்பின் முக்கிய பிரிவான `சுதந்திரமான நிரந்தர மனித உரிமைகள் ஆணைக்குழு' ( Independent Permanent Human Rights Commission) விமர்சனம் செய்திருந்தது.

யாசின் மாலிக்

இந்தநிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, `` யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. யாசின் மாலிக் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்தியாவை விமர்சித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைப்பு இதன் மூலமாக யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. பயங்கவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த வேண்டாம்'' என்றார்.



from Latest News https://ift.tt/OE7myFg

Post a Comment

0 Comments