ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் விஜய் குமார், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 26 வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக, கடந்த வியாழனன்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஃபரூக் அப்துல்லா, ``காஷ்மீரில் தினமும் மரணங்கள் நிகழ்கின்றன. இங்கு மரணங்கள் நிகழாத ஒரு நாள் கூட இல்லை.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் ராணுவ வீரர்களால் நிரம்பியுள்ளது. ராணுவத்தால் எப்போதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. மக்களுக்கு அன்பு தான் தேவை என்பதை அவர்கள்(மத்திய அரசு) புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் நீங்கள் மக்களின் மனதை வெல்லும் வரை நான் நிம்மதியாக இருக்க மாட்டேன். மக்களின் இதயங்களை வெல்லும் வரை ஜம்மு-காஷ்மீரில் அமைதி இருக்காது" என மத்திய அரசை தாக்கிப் பேசினார்.
from Latest News https://ift.tt/uj7ldB6
0 Comments