https://gumlet.vikatan.com/vikatan/2022-05/a90750c0-4ea9-48e5-ab52-21b1586ef2fa/f81e7bef_28a8_45a7_8a34_4a9efe0ba6f1.jfif``உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தால் சரி; மக்களுக்கு கொடுத்தால்..."-கெஜ்ரிவால் காட்டம்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், ``சில அரசியல் தலைவர்கள் இலவசங்களால் மக்களிடம் செல்வாக்கு பெற வேண்டாம். இலவசங்கள் அரசை சீரழித்துவிடும், மேலும் அவை பொருளாதாரத்துக்கு நல்லதல்ல" என நேற்று மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், ``பாட்டீல் சாஹிப், உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது, அது மட்டும் சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறிக்கையில், ``பாட்டீல் சாஹிப், உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது, அது மட்டும் சரியா?. ஆனால், பொதுமக்களுக்கு நான் இலவச மின்சாரம் வழங்கினால் சிரமம் என்கிறீர்கள். குஜராத் அரசில் மிகப்பெரிய அளவில் ஊழல் உள்ளது. டெல்லியைப் போல் , பஞ்சாப்பை போல் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினாலும் இங்கு அதிகளவில் பணம் சேமிக்கப்படும்" என்று கூறினார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நடைபெற்ற பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ``பாஜக தலைவர்கள் ஊழல் செய்வதால், பாஜக அரசாங்கம் இலவச மின்சாரம் வழங்க முடியாது. இலவச மின்சாரம் வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குகிறோம்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/aryUu7K

Post a Comment

0 Comments