https://gumlet.vikatan.com/vikatan/2022-05/6a193e0d-b29c-4908-85d7-538c34834b28/russia.jpg`வெல்ல முடியாதது..!' - அச்சுறுத்தும் ரஷ்ய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன?

ரஷ்ய-உக்ரைன் போரின் சமீபத்திய அப்டேட்டாக ஏவுகணை தொடர்பான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம். `ஜிர்கான் ஹைப்பர்சோனிக் குரூஸ்' (Zircon hypersonic cruise Missile) என்ற ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. மாஸ்கோ தனது தாக்குதலை உக்ரைன்மீது முடுக்கிவிட்ட நிலையில், ரஷ்யா இத்தகைய ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த ஏவுகணை ரஷ்யாவின் பேரன்ட்ஸ் கடலில் அமைந்திருக்கும் `Admiral Gorshkov' போர்க்கப்பல் ஸ்டேஷனிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை ஆர்டிக் பெருங்கடலில் உள்ள White Sea என்னும் பகுதிக்கு 1,000 கிலோமீட்டர் வெற்றிகரமாகப் பயணம்செய்து துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. புதிய ஆயுத சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஏவுகணை

இதற்கு முன்னதாக முதல் அதிகாரபூர்வ ஜிர்கான் ஏவுகணை சோதனை 2020-ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது. இந்த நிகழ்வை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், `தி கிரேட் இவன்ட்' என்று குறிப்பிட்டார். அடுத்தடுத்த சோதனைகள் அதே போர்க்கப்பலிலிருந்தும், நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் நடத்தப்பட்டன.

பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஹைபர்சோனிக் ஆயுதத்தின் சமீபத்திய சோதனையை ரஷ்யா மேற்கொண்டிருக்கிறது. ஒளியின் வேகத்தைவிட ஐந்து முதல் பத்து மடங்குவரை வேகமாக பயணிக்கும் இந்த ஹைபர்சோனிக், அதிகபட்சமாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்வரை சென்று துல்லியமாக இலக்கை சாய்க்கும் திறன் கொண்டதாகவும்.

ரஷ்ய அதிபர் புதின்

அதிபர் விளாடிமிர் புதின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்ய ஆயுத களஞ்சியத்தின் `invincible' என்று விவரிக்கிறார். `Invincible' என்பதற்கான அர்த்தம் வெல்லமுடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/CV3fosA

Post a Comment

0 Comments