தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தலைவன் வடலியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு உப்பளத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆவரையூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. உடனடியாக சண்முகராஜ், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால், அந்தக் கும்பல் அவரை சுற்றிவளைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் காவல்நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த 3 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இதே தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சத்தியமூர்த்தி, தோட்டத்தில் இளநீர் திருடுயது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மாற்று சமூகத்தினரால் சத்தியமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யபப்டடார். அவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் நிலுவையில் இருந்தது. சத்தியமூர்த்தியின் கொலைக்குப் பிறகு சத்தியமூர்த்தி தரப்பிற்கும் அவரைக் கொலை செய்த மாற்று சமூகத்தினருக்கும் பகை இருந்து வந்தது. ஊர்ப் பெரியவர்கள் தலையிட்டு சிறுசிறு பிரச்னைகளை அவ்வப்போது சமாளித்து வந்தனர்.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுக்கு முன்பு சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்ட நினைவுநாளான நேற்று பழிக்குப்பழியாக ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டதும், அந்த திட்டத்தில் சண்முகராஜை கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தலைவன்வடலி கிராமத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காகப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
from Latest News https://ift.tt/8CETfh1
0 Comments